/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு
/
சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு
சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு
சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு
ADDED : அக் 27, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : பொது அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.1.16 லட்சம் கையாடல் செய்ததாக ஓய்வு பெற்ற உதவி அஞ்சலக அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செஞ்சி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன்,64; ஓய்வு பெற்ற உதவி அஞ்சலக அதிகாரி. இவர், கடந்த 2019ம் ஆண்டு செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் அஞ்சலகத்தில் பணி புரிந்த போது, அஞ்சலக சேமிப்பு கணக்கில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 ரூபாய் கையாடல் செய்ததாக செஞ்சி உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் அனு, 36; நேற்று செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.