ADDED : மார் 08, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் மலட்டாறு அருகே ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்து அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருண்,35; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
