/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
/
நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
ADDED : மே 19, 2025 06:24 AM
செஞ்சி : நிலப்பிரச்னை தகராறு செய்த இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
செஞ்சியை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 54; அதே ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 60; இரு குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக நிலப் பிரச்சனை உள்ளது.
கடந்த 12ம் தேதி மாலை குணசேகரன், அவரது தாயார் ரூபாவதி, 75; ஆகியோர் விவசாய நில வரப்பு மீது நடந்து சென்றனர்.
அப்போது இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் குணசேகரன், ரூபாவதி, செல்வராஜ் மற்றும் அவரது மகள் சத்தியா, 37; ஆகியோர் காயம் அடைந்தனர்.
இது குறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.
சத்தியா கொடுத்த புகாரின் பேரில் குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.