/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
/
பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 29, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; பெண்ணை திட்டி மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்தவர் தயாநிதி மனைவி பிருந்தாவதி, 44; இவரது மகன் பிரவீன். சாலாமேட்டை சேர்ந்தவர் பூவரசன், 30; கடந்த 24ம் தேதி பிரவீன், பூவரசன் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி பூவரசன் தம்பி வசந்தராஜா, 28; அவரது நண்பர் அஜீத், 22; ஆகியோர் பிரவீன் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது தாய் பிருந்தாவதியை திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், வசந்தராஜா, அஜீத் ஆகிய 2 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

