ADDED : ஜூலை 07, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி,49; இவரது வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பியை, உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி, தேவேந்திரன், கிருபாபுரி ஆகியோர் உடைத்து சேதப்படுத்தினர்.
இதைக்கேட்ட ராஜேஸ்வரியை, திட்டி, தாக்கினர். விழுப்புரம் தாலுகா போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.