/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 21, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வாலிபரைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் முத்துகிருஷ்ணன், 26; இவர், கடந்த 16ம் தேதி கோவிந்தபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
அப்போது எதிர் திசையில் பைக்கில் வந்த கோடி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், ரமேஷ் (எ) அய்யப்பன், மதன் ஆகியோர், முத்துகிருஷ்ணனை ஓரமாக போகும்படி கூறி தகராறு செய்து தாக்கி மிரட்டினர்.
புகாரின் பேரில், மகேந்திரன் உட்பட 3 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.