/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 01, 2025 12:59 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
காந்தலவாடியை சேர்ந்தவர் அய்யனார், 40; தனியார் பஸ் டிரைவர். இவர் கடந்த, 20ம் தேதி இரவு புதுச்சேரி-விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி வந்தார்.
இரவு 8:20 மணிக்கு, வளவனுார் அருகே வந்தபோது, காரில் பயணித்த விழுப்புரம் கே.கே.ரோடு உமர், 34; ஷாருக், 32; உள்ளிட்டோர், அந்த பஸ்சுக்கு வழிவிடாமல், மெதுவாக காரை இயக்கி இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தபோது, பின் தொடர்ந்து காரில் வந்து, பஸ்சை நிறுத்தி டிரைவர் அய்யனாரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், உமர், ஷாரூக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.