/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 27, 2025 11:06 PM
கோட்டக்குப்பம்: முன் விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் அருகே பெரிய கொழுவாரியை சேர்ந்தவர் எட்டியான், 67; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி இரவு கமலேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பெருமாள், அரிபுத்திரன் ஆகியோர், எட்டியான் வீட்டிற்கு சென்றனர். அவரை கடுமையாக தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
மேலும் அவரது வீட்டில் இருந்த மறைந்த எட்டியான் மனைவி படத்தில் போடப்பட்டிருந்த, 5 சவரன் செயினை எடுத்து கொண்டு சென்றனர். படுகாயமடைந்த எட்டியான், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார், கமலேஷ், பெருமாள், அரிபுத்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.