/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட்டில் தகராறு 3 பேர் மீது வழக்கு
/
கிரிக்கெட்டில் தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 23, 2025 07:07 AM
விழுப்புரம் : காணை அருகே கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மகன் பகவான், 27; அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ரவிந்திரன், 25; ராகுல், 24; ஆனந்தபிரபு, 26; இவர்கள் நால்வரும் அங்குள்ள துவக்கப்பள்ளி அருகே கடந்த 20ம் தேதி கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது, அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டு பகவானை, ரவிந்திரன் உட்பட மூவரும் சேர்ந்து திட்டி தாக்கிய போது, மறிக்க வந்த பகவானின் தந்தை ஜோதி, தாய் பரிமளா (எ) பூமல்லி ஆகியோரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காணை போலீசார், ரவிந்திரன் உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.