/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணுடன் தகராறு 4 பேர் மீது வழக்கு
/
பெண்ணுடன் தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : டிச 27, 2024 06:49 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடைச் சேர்ந்தவர் முருகானந்தம்,45; இவரது மனைவி வனிதா, 40; முருகானந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு சிகிச்சை முடிந்து கடந்த 17ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வந்த முருகானந்தத்தின் உடன் பிறந்த உறவினர்களான முத்துலட்சுமி, நாகராஜன், ரோஷினி, முருகன் உள்ளிட்டோர், சகோதரர் முருகானந்தத்தை ஏன் சரியாக பார்த்துகொள்ளவில்லை என்று கேட்டு, வனிதாவிடம் தகராறு செய்து, தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த வனிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வனிதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசாார், முத்துலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.