/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை தாக்கிய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2025 01:02 AM
விழுப்புரம்; மனைவியை திட்டி அடித்த கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் கே.கே., ரோடு மணி நகரை சேர்ந்தவர்கள் தஸ்தாகீர் வாருக் மகன் சமீர் வாருக், 32; சிக்கன் கடையில் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி மர்லியா, 22; இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீர் வாருக் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து அவரது தாய் நைமாபானு, 55; தம்பிகள் சாலிக், 24; இப்ராஹீம், 26; ஆகியோருடன் சேர்ந்து மர்லியாவை சந்தேகப்பட்டு திட்டி தாக்கியுள்ளார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், சமீர் வாருக் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.