/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருதரப்பினர் தாக்குதல் 6 பேர் மீது வழக்கு
/
இருதரப்பினர் தாக்குதல் 6 பேர் மீது வழக்கு
ADDED : செப் 30, 2025 07:43 AM
விழுப்புரம் : புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 50; செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார். இவர், விழுப்புரம் அடுத்த குடுமியான்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி சத்யா, 45; என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி 3 லட்சம் ரூபாய் திருப்பி கொடுத்துள்ளார்.
மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை கேட்டு கடந்த 26ம் தேதி பைக்கில் சென்ற நந்தகுமாரை வழிமறித்து, சத்யா மற்றும் அவரது மகன்கள் வினோத்குமார், 33; தேவநாதன், 25; ஆகியோர் தாக்கினர். தொடர்ந்து, இளங்காட்டைச் சேர்ந்த முரளி, கலைமன்னன், 35; மற்றும் ஒருவர் சேர்ந்து சத்யா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மகன் தேவநாதனை தாக்கி, வீட்டு ஜன்னல், மின்விசிறியை உடைத்து சேதப்படுத்தினர்.
இருதரப்பு புகாரின்பேரில், சத்யா, வினோத்குமார், தேவநாதன் மற்றும் கலைமன்னன், முரளி மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து கலைமன்னனை கைது செய்தனர்.