/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
ADDED : மே 04, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வீட்டுமனை பிரச்னை தொடர்பாக தாக்கிக் கொண்ட இருதரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி, 26; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முத்து, 45; இருவரது குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துக் கொண்டனர்.
இரு தரப்பு புகாரின் பேரில், முத்து, கிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.