/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பு தகராறு 9 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு தகராறு 9 பேர் மீது வழக்கு
ADDED : மே 06, 2025 05:09 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே இரு தரப்பு தகராறில் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன், 35; இவர், குப்பம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம் 2 லட்சம் ரூபாய் சீட்டு பணம் கட்டியிருந்தார். சந்தோஷ்குமார் கடந்த இரு மாதங்களுக்கு முன் இறந்தார்.
இறந்த சந்தோஷ்குமார் மாமனார் ரவியிடம், சபரிநாதன் சீட்டு பணம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரவி தனது ஆதரவாளர்கள் கனகராஜ், உலகநாதன், கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து சபரிநாதனை திட்டி தாக்கினார்.
சபரிநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குணசேகரன், பாஸ்கரன், பாலாஜி, சுபாஷ் ஆகியோர் ரவி தரப்பினரை தாக்கினர். இரு தரப்பு புகார்களின் பேரில், வளவனுார் போலீசார் ரவி, சபரிநாதன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.