/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு
/
தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2025 12:17 AM
விழுப்புரம்: தகராறில் தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் வீராசாமி மனைவி சிவகாந்தமணி, 45; நேற்று முன்தினம் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதே பகுதியில் உள்ள பேபி என்பவர் வீட்டின் அருகே வேப்பிலை பாடம் அடிக்க தனது மகன் சஞ்சய், 24; என்பவருடன் சென்றார்.
அப்போது இருமல் ஏற்பட்டு சிவகாந்தமணி எச்சில் துப்பியபோது, அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் அஜய், 25; என்பவர் தன்னை பார்த்து துப்பியதாக கூறி தகராறு செய்தார்.
இதனால், ஏற்பட்ட தகராறில், அஜய் மற்றும் அவரது அண்ணன் அபிமன்யூ, 27; ஆகியோர் சேர்ந்து சிவகாந்தமணி, சஞ்சயைதாக்கி, மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், அஜய், அபிமன்யூ ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.