ADDED : ஆக 15, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,; விழுப்புரம் அருகே பங்க் கடையில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தில் சக்திவேல் முருகன், 43; என்பவரது பெட்டிக் கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதனையடுத்து, சக்திவேல் முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.