/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
/
விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; நிலப் பிரச்னையில் விவசாயியை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 70; விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்பாண்டியன், 45; என்பவருக்கும் 6 செண்ட் பொதுவான நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்னை இருந்து வருகின்றது. அந்த நிலத்தை நேற்று முன்தினம் குப்புசாமி சுத்தம் செய்துள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் குப்புசாமியை, தமிழ்பாண்டியன் திட்டி தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார், தமிழ்பாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

