/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
/
போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2025 03:02 AM
வானுார் : ஆரோவில் அருகே போலீஸ் ஏட்டுவை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஜெயப்பிரகாஷ், 38; இவர் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக குயிலாப்பாளையம் வழியாக ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இடையஞ்சாவடி சந்திப்பில், அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த பைக் திடீரென நின்றது. இதனால் ஜெயப்பிரகாஷ் தனது பைக்கை நிறுத்த முயன்றார்.
இந்நிலையில் அவருக்கு பின்னால் பைக்கில் வந்த, இடையஞ்சாவடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஜெயப்பிரகாஷ் மீது எச்சில் துப்பி, ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார், முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

