ADDED : நவ 28, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ம.க., வினர் 101 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் காலை மனு அளிக்க திரண்டு வந்த பா.ம.க., வினர், ராமதாசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது, அனுமதியின்றி திரண்டு வந்ததாக, பா.ம.க., வினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, பா.ம.க., விழுப்புரம் மாவட்ட செயலர் பாலசக்தி தலைமையில் 101 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.