ADDED : ஜூன் 01, 2026 09:39 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணைத் தாக்கி வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி நித்யா, 36; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாஞ்சாலி. இவர், அங்குள்ள 2 அடி இடம் தனக்கு சேர்ந்து வருவதாக கூறி நித்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
பாஞ்சாலிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பழனிவேல், 40; கடந்த 29ம் தேதி நித்யாவை திட்டி, தாக்கியதோடு வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், பழனிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
