/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிளியனூர் அருகே தந்தையை தாக்கிய மகன், மருமகன் மீது வழக்கு பதிவு
/
கிளியனூர் அருகே தந்தையை தாக்கிய மகன், மருமகன் மீது வழக்கு பதிவு
கிளியனூர் அருகே தந்தையை தாக்கிய மகன், மருமகன் மீது வழக்கு பதிவு
கிளியனூர் அருகே தந்தையை தாக்கிய மகன், மருமகன் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 25, 2024 05:28 AM
வானூர் : கிளியனுார் அருகே தந்தையை வழிமறித்து தாக்கிய மகன், மருமகன் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பாரதியார் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. 55; இவரது மகன் விஜயக்குமார்.
இவர் கொஞ்சிமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறார்.ஏழுமலைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
இதில், ஏழுமலைக்கும், விஜயக்குமாருக்கும் சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி காலாப்பட்டில் இருந்து கொஞ்சிமங்கலத்தில் உள்ள தனது அக்காள் பூரணியை பார்க்க வந்துள்ளார்.
அப்போது கீழ்புத்துப்பட்டு சாலை கொடூர் ஏரிக்கரை அருகில் வந்தபோது, அவரை விஜயக்குமார், மருமகன் தமிழரசன், நண்பர்களான மைக்கேல், செல்வராஜ் ஆகிய நான்கு பேரும், வழிமறித்து, அவரை தாக்கியுள்னளர். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் விஜயக்குமார், தமிழரசன், மைக்கேல், செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகினற்னர்.