/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலையில் பைக் சாகசம் வாலிபர் மீது வழக்கு பதிவு
/
நெடுஞ்சாலையில் பைக் சாகசம் வாலிபர் மீது வழக்கு பதிவு
நெடுஞ்சாலையில் பைக் சாகசம் வாலிபர் மீது வழக்கு பதிவு
நெடுஞ்சாலையில் பைக் சாகசம் வாலிபர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 24, 2025 05:41 AM
வானுார்: கிளியனூர் அருகே சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் தினேஷ், 19; இவர், நேற்று முன்தினம் மாலை புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாகசம் செய்து அதிவேகமாக சென்றார். அப்போது, தென்கோடிப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த கிளியனூர் சப்இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் பைக்கை மடக்கி விசாரணை நடத்தினர்.
சாகசம் செய்த தினேஷ் மீது போலீசார் மீது வழக்கு பதிவு செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். தினேஷ் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.