ADDED : ஏப் 07, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிரை வண்ணார் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் செஞ்சியில் நடந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் புஷ்பாவதி தலைமை தாங்கினார். வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஜாதி சான்றிதழ் வழங்கி துவக்கி வைத்தார்.
முகாமில், செஞ்சி, வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட புதிரை வண்ணார் இன மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், மருத்துவ காப்பீட்டு அட்டை, நல வாரிய அட்டை வழங்கப்பட்டது.
செஞ்சி தாலுகா புதிரை வண்ணார் சங்க தலைவர் அருள் வளவன், ஆர்.ஐ., பரமசிவம் பங்கேற்றனர்.

