/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாட்டுப் பொங்கல் விழா மயிலத்தில் கோலாகலம்
/
மாட்டுப் பொங்கல் விழா மயிலத்தில் கோலாகலம்
ADDED : ஜன 17, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் பகுதியில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயிலம், பேரணி, செண்டூர், பெரியதச்சூர், ரெட்டணை, தீவனூர், கூட்டேரிப்பட்டு, பாலப்பட்டு ஆகிய ஊர்களில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, அழகிய தோரணம், புது கயிறு ஆகியவற்றை கட்டி. மாட்டு வண்டிகளில் கிராம மக்கள் ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வந்தனர்.
பின்னர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவில்களில் பொங்கல் வைத்து படையலிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பல ஊர்களில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், நடன நிகழ்ச்சிகள், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்றவை நடந்தது.

