/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிமென்ட் சாலை பணி துவக்கி வைப்பு
/
சிமென்ட் சாலை பணி துவக்கி வைப்பு
ADDED : நவ 13, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் ரூ.23.90 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் மொத்தியார் அலி துவக்கி வைத்தார்.
செஞ்சி பேரூராட்சி எல்.டி.பாங்க் மற்றும் ரங்கசாமி தெருவில் பொது நிதியில் இருந்து ரூ. 23.90 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.
இதில் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, கவுன்சிலர்கள் கார்த்திக், சிவக்குமார், மோகன், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

