/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
மத்திய மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 01, 2025 02:51 AM

விழுப்புரம்: விழுப்புரம், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், பாக முகவர்களுக்கான தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், தலைமை வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.
சட்டசபை தொகுதி பார்வையாளர் சரவணன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத், பஞ்சநாதன், நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், பேரூராட்சி செயலாளர் ஜீவா, நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

