ADDED : பிப் 16, 2026 06:47 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கிழக்கு நகரம், பானாம்பட்டு, ராகவன்பேட்டை, மகாராஜபுரம், குச்சிப்பாளையம், எருமணந்தாங்கல், காகுப்பம், சேவியர் காலனி, சித்தேரிக்கரை, ஜி.ஆர்.பி., தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிழக்கு நகர பொறுப்பாளர் வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், லெனின் விஜய், தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, துணை அமைப்பாளர் தயாநிதி.
ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பிரேம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி.
நகர்மன்ற கவுன்சிலர்கள் ஜெயந்தி மணிவண்ணன், நவநீதம் மணிகண்டன், நந்தா நெடுஞ்செழியன், வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், கண்ணன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
