ADDED : பிப் 17, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம், அண்ணா நகர், மருதுார் ராஜிவ்காந்தி நகர், சாலாமேடு, சிங்கப்பூர் நகர் ஆகிய பகுதிகளில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, நகர பொறுப்பாளர் சர்க்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மருத்துவரணி துணை அமைப்பாளர் ஷேக், நிர்வாகிகள் ராம், பிரகதீஸ்வரன், சூர்யா, சலீம், வார்டு துணை செயலாளர் கோடீஸ்வரன், அசாருதீன், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
