ADDED : ஜன 23, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் தமிழழகன், அமைப்பு செயலாளர் திரு, இளைஞர் சங்க செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் பாலஆனந்த், இளைஞரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சந்தோஷ், எழில், வேல்முருகன், சக்திவேல், பாலா, செல்வம், குபேந்திரன், சங்கர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவது. மாவட்டத்தில் உள்ள பா.ம.க., கிளைகளை பலப்படுத்துவது. பூத் கமிட்டி அமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.
