/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்திய அரசு திட்ட வீடுகள் விபரம் பெற உதவி மையம்
/
மத்திய அரசு திட்ட வீடுகள் விபரம் பெற உதவி மையம்
ADDED : பிப் 17, 2024 05:37 AM
விழுப்புரம் : மத்திய அரசு வீடுகள் திட்ட பயனாளிகள் விபரம் பெற உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள், பசுமை வீடுகள், பழங்குடியினர் வீடுகள் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள், புகார்கள், திட்டம் சார்ந்த உதவிகள் குறித்து அனைத்து வட்டாரங்களிலும் 'உங்கள் உயர்விற்கு உதவி மையம்' பெயரில் வீடுகளுக்கான சிறப்பு குறைதீர்வு மற்றும் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.
அனைத்து ஊரக குடியிருப்பு திட்ட வீடுகள் தொடர்பாக பயனாளிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட அளவில் மொபைல் 9363372753, 9363443274 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.