ADDED : ஜன 21, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சி.இ.ஓ., அறிவழகன் ஆய்வு செய்தார்.
பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான குடிநீர் வசதி, சுகாதாரம் குறித்தும், பள்ளி வளாகத் தூய்மை மற்றும் பாதுகாப்பு அம் சங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின் போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்திய மூர்த்தி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார், பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி உடனிருந்தனர்.