/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா
/
அரசு கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா
ADDED : டிச 17, 2025 07:03 AM

வானுார்: வானுார் அரசு கலைக் கல்லுாரியில் சிறுதானிய உணவகம் திறப்பு விழா நடந்தது.
மயிலம் ரோட்டில் செயல்பட்டு வரும் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதையொட்டி சிறுதானிய உணவகம் திறப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
சிறுதானிய உணவகத்தில் மாணவர்களுக்கு மலிவு விலையில் தரமான முற்றும் சத்தான சிறுதானிய உணவுகள் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், வானுார் பிடிஓ.,க்கள் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட வழங்கல் விற்பனை மேலாளர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

