/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
/
ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜன 26, 2026 04:08 AM

வானுார்: டி.பரங்கனி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பயிற்சி பெற்ற ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கிளியனுார் அடுத்த டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளமதி, வட்டார கல்வி அலுவலர் கவிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள் கல்வி தரம் குறித்தும், பள்ளியின் சுற்றுப்புறத்தை பார்வையிட்டு சுற்றுச்சுவர் தேவை குறித்தும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, சிறந்த புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் இந்தாண்டு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் வழங்கப்பட்ட பள்ளிக்கான மாநில எழுத்தறிவு விருதை, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயசாந்தி மற்றும் ஆசிரியர்களிடம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வழங்கினார்.
மேலும், பயிற்சி பெற்ற ஜே.ஆர்.சி., மாணவர்கள் 26 பேர் மற்றும் ஜே.ஆர்.சி., ஆலோசகர் இளங்கோவன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழாசிரியர் சுமதி, சமூகவியல் ஆசிரியர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள் ஜெகஷீஜா, ரேவதி, விஜயகுமார், தற்காலிக பட்டதாரி ஆசிரியர் சிவராமன் உடனிருந்தனர்.

