/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை
/
செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை
ADDED : அக் 26, 2024 07:38 AM
மரக்காணம்: மரக்காணம் அருகே பட்டப் பகலில் மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து 5 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த பச்சைபயத்தான் கொல்லையைச் சேர்ந்தவர் முத்துவேல் மனைவி நந்தினி, 32; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டில் இருந்து ஆலங்குப்பத்தில் நடக்கும் சுய உதவிக்குழு கூட்டத்திற்கு மொபட்டில் சென்றார்.
அப்போது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் குரும்புரம் வனப்பகுதி அருகே நந்தினியை மொபட்டை மறித்து அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப் பகலில் செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.