ADDED : நவ 27, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கடன் கேட்டு பணம் தராததால் வீட்டில் தனியாக இருந்தவரிடம் செயினை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, ஏ.பி.எஸ்., நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத் மனைவி பஷீர்நிஷா,35; இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் காஜாமொய்தீன் மனைவி ஜெய்புனிஷா,50; என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.5 ஆயிரம் கடனாக கேட்டு வந்துள்ளார். பஷீர்நிஷா பணம் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஜெய்புனிஷா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பஷீர்நிஷாவிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த 28 கிராம் செயினை பறித்து சென்றார்.
இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஜெய்புனிஷாவை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

