/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
/
அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 23, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி அங்காளம்மன் கோவிலில் புதிய அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் நேற்று நடந்தது.
அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கள்ளக்குறிச்சி ரமேஷ், மேல்மலையனுார் சக்திவேல் முன்னிலையில் தேர்தல் நடந்தது.
இதில் மூன்றாம் முறை அறங்காவலர் ஏழுமலை என்கின்ற சேட்டு புதிய அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார்.
இதில் அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, அறங்காவாலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் சதீஷ், மணி பணியாளர்கள் பூசாரிகள் கலந்து கொண்டனர்.