/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான கராத்தே போட்டி சாணக்யா பள்ளி மாணவர்கள் சாதனை
/
மாநில அளவிலான கராத்தே போட்டி சாணக்யா பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான கராத்தே போட்டி சாணக்யா பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான கராத்தே போட்டி சாணக்யா பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : நவ 28, 2024 07:22 AM

திண்டிவனம்: மாநில அளவிலான கராத்தே போட்டியில், சாணக்கியா பள்ளி மாணவர்கள முதலிடத்தை பிடித்தனர்.
புதுச்சேரி கவுண்டன்பாளையத்திலுள்ள முத்து ரத்தினா அரங்கத்தில், மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில், திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பரணிதரன், மாணவி சுஜிஸ்ரீ மாநில அளவில் முதலிடத்தை பிடித்தனர். இதேபோல் குத்துசண்டை மற்றும் கட்டா பாட்டியிலும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.
தஞ்சாவூர், ஒரத்தநாடு, வீர ரத்னா மகாலில் மாநில அளவில் நடந்த சிலம்பம் போட்டியில், மாணவர் அபிலேஷ் முதல் இடத்தையும், மாணவி அக் ஷயா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் தேவராஜ், துணை தலைவர் வேல்முருகன், பள்ளியின் முதல்வர் அருள்மொழி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
இதில் கராத்தே பயிற்சி ஆசிரியர்கள் இளங்கோவன், செல்வி சங்கவி, உடற்கல்வி ஆசிரியர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.