ADDED : மார் 15, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: வீரங்கிபுரம் அங்காளம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்தது.
இக்கோவிலில், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன் தினம் பூங்கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

