/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்சித்தாமூர் பர்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா
/
மேல்சித்தாமூர் பர்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஏப் 11, 2025 06:28 AM

செஞ்சி: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைமையிடமான ஜின கஞ்சிமடம் உள்ளது.
இங்குள்ள பார்சுவநாதர் கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 10 நாள் பெருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
7-ம் நாள் விழாவாக நேற்று மகாவீர் ஜெயந்தி மற்றும் தேர் திருவிழா நடந்தது.
நேற்று காலை 9 மணிக்கு பகவான் 1008 'பார்சுவநாதரை தேரில் ஏற்றி, மடாதிபதி லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வடம் பிடித்தல் துவங்கியது.
இதில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., ஆரணி எம்.பி., தரணிவேந்தன் மற்றும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
மடத்தின் சார்பிலும், ஜெயின் அமைப்புகள் சார்பிலும் அன்னதானம், ஜைனர்களின் வீடுகளில் குளிர்பானம், மோர் வழங்கினர்.

