ADDED : ஜன 25, 2026 04:24 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: குடியரசு தின விழா நாளை 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பையொட்டி, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று தீவிர சோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
பயணிகளின் உடமைகள் மற்றும் பிளாட்பாரங்களிலும், வாகனங்ள் நிறுத்துமிடம், தண்டவாளங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் உதவியோடு சோதனை செய்தனர்.
