/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் வேதியியல் மன்ற விழா
/
அரசு கல்லுாரியில் வேதியியல் மன்ற விழா
ADDED : செப் 22, 2024 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வேதியியல் மன்ற விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் நாராயணன் (பொறுப்பு) தலைமை தாங்கி பேசினார். விழாவில், திருவண்ணாமலை அரசு கல்லுாரி இணைப் பேராசிரியர் கணபதி, சென்னை பாரதி பெண்கள் அரசு கல்லுாரி இணைப் பேராசிரியர் பத்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேதியியல் துறைத் தலைவர் கண்ணன் விழாவினை ஒருங்கிணைத்தார்.