/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரங்கபூபதி கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம்
/
ரங்கபூபதி கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம்
ADDED : நவ 05, 2025 01:54 AM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில் வேதியியல் கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார்.
இயக்குனர் சாந்தி பூபதி குத்து விளக்கேற்றினார். கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் பிரசிடென்சி காலேஜ் வேதியல் துறை உதவி பேராசிரியர் கணேசன் வேதியியல் துறையின் அடிப்படை கருத்து மற்றும் வளர்ச்சி குறித்து விளக்கினார்.
கல்லுாரி முதல்வர்கள் சசிகுமார், செந்தில்குமார், சுப்ரமணி, துறை தலைவர்கள் பார்வதி, வினோதினி, கோகுலப்பிரியா, பேராசிரியர்கள் சுகுமார், சச்சிதானந்தன், செல்வி, ஆதிலட்சுமி பங்கேற்றனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

