ADDED : ஆக 30, 2025 12:21 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளியில் பொன்முடி எம்.எல்.ஏ.,வின் பவளவிழா பிறந்தநாளையொட்டி, மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி நடைபெற்றது.
இதில் சிகா, சூரியா கல்லுாரிகளுக்கு இடையே ஓபன் பிரிவில் செஸ் போட்டி நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடந்தது.
இந்த போட்டியில், 174 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், 10, 12, 14, 17 வயதிற்கு உட்பட்ட மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வென்ற 100 மாணவ, மாணவியருக்கு விஷால் ஏஜென்சீஸ் தலைவர் விசாலாட்சி பொன்முடி, கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து பள்ளி முதல்வர் கோபால், செஸ் பயிற்சியாளர் சம்பத் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகர், ராமராஜன், தேகளீசன், சீனுவாசன், ராம்குமார், ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.