/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது இடங்களில் கோழி கழிவுகள் தொற்று நோய் பரவும் அபாயம்
/
பொது இடங்களில் கோழி கழிவுகள் தொற்று நோய் பரவும் அபாயம்
பொது இடங்களில் கோழி கழிவுகள் தொற்று நோய் பரவும் அபாயம்
பொது இடங்களில் கோழி கழிவுகள் தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : டிச 11, 2024 04:50 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் இறந்த போன கோழிகள் மற்றும் கழிவுகள் கொட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
திருவெண்ணெய்நல்லுார் - பெரிய சேவலை பிரதான சாலை வழியாக பள்ளி மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பெரிய ஏரி இரண்டாவது மதகு பகுதியில் இப்பகுதியை சேர்ந்த சிலர் கோழி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் இரவு நேரங்களில் கொட்டுகின்றனர்.
இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.
எனவே அப்பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.