/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பக்கிங்காம் கால்வாய் பாலம் பணி: தலைமைப் பொறியாளர் ஆய்வு
/
பக்கிங்காம் கால்வாய் பாலம் பணி: தலைமைப் பொறியாளர் ஆய்வு
பக்கிங்காம் கால்வாய் பாலம் பணி: தலைமைப் பொறியாளர் ஆய்வு
பக்கிங்காம் கால்வாய் பாலம் பணி: தலைமைப் பொறியாளர் ஆய்வு
ADDED : மே 12, 2024 11:25 AM

மரக்காணம்: மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் - மரக்காணம் இரு வழி சாலையை நான்கு வழிச் சாலையாக கடந்த 2021-22ம் நிதி ஆண்டில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 238 கோடி ரூபாய் மதிப்பில் 32 கி.மீ., துாரத்திற்கு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் மரக்காணம் பக்கிங்காம் கழுவேலி ஆற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு பொறியாளர் சத்யபிரகாஷ், கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் மகேஷ், உதவி பொறியாளர் தீனதயாளன், இளநிலை பொறியாளர் ராமு உடனிருந்தனர்.