/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரூ.10 கோடியில் திருச்சுற்று மதில்: முதல்வர் துவக்கி வைப்பு

ADDED : ஜூன் 19, 2025 05:08 AM

செஞ்சி, : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரூ.10 கோடி மதிப்பில் திருச்சுற்று மதில் அமைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான ரங்கநாதர் குடைவறை கோவில் உள்ளது. இந்த கோவில் திருசுற்று மதில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மழையின் போது சரிந்து விழுந்தது.
இதையடுத்து நேற்று ரூ.10 கோடி மதிப்பில் திருசுற்று மதில் கட்டுவதற்கான பணியை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் துவக்கி வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் பூமி பூஜை நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜையை நடத்தினார். இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், செயற்பொறியாளர் யோகராஜ், ஆய்வாளர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், தாசில்தார் துரைச்செல்வன், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர், ஊராட்சித் தலைவர் பராசக்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், கோவில் நிர்வாகி இளங்கீர்த்தி ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.