/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அறிவுசார் மையம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
/
விழுப்புரத்தில் அறிவுசார் மையம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
விழுப்புரத்தில் அறிவுசார் மையம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
விழுப்புரத்தில் அறிவுசார் மையம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
ADDED : ஜன 06, 2024 05:06 AM

விழுப்புரம : விழுப்புரத்தில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை அமைச்சர் மஸ்தான் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் கல்லூரி சாலை பகுதியில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் அமைச்சர் மஸ்தான், எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், கலெக்டர் பழனி ஆகியோர் பங்கேற்று, குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகராட்சி சேர்மன் தமிழ்ச்செல்வி, துணை சேர்மன் சித்திக்அலி, ஆணையர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர மன்ற கவுன்சிலர்கள் மணவாளன், கோமதி, மணி, மெரினா, ஜெயந்தி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் 2,382 எண்ணிக்கையிலான புத்தகங்களுடன், பொது வாசிப்பு பகுதி, ஆண்கள் வாசிப்பு பகுதி, குழந்தைகளுக்கான செயல்பாட்டு பகுதி, 'வைபை' வசதியுடன் கூடிய பகுதி, ஸ்மார்ட் வகுப்பு பயிற்சி அறையும், அதில் 15 கணினியும், சி.சி.டி.வி., கட்டுப்பாட்டு அறையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஜெனரேட்டர் வசதியுடன் டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.