/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு பணி: கலெக்டர் ஆலோசனை
/
முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு பணி: கலெக்டர் ஆலோசனை
முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு பணி: கலெக்டர் ஆலோசனை
முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் முன்னேற்பாடு பணி: கலெக்டர் ஆலோசனை
ADDED : ஜன 22, 2025 09:42 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வர உள்ளதை யொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும் 27,28 ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இவர், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பயனாளிகளுக்கு அரசு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை, அரசு நலத்திட்ட உதவிகள் விபரம், முடிவுற்ற, புதிய திட்ட பணிகள் விபரம் குறித்து கலெக்டர், அலுவலர்களோடு கலந்தாலோசனை செய்தார். முதல்வர் வரும் வழித்திடம், நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள், பயனாளிகள் தேர்வு பட்டியல் தயாரித்தல், உயர் அலுவலர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்வது பற்றியும், செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை ஆகிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் பழனி ஆலோசனை செய்தார். இதில், எஸ்.பி., சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.