/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
13,879 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
/
13,879 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
13,879 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
13,879 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
ADDED : பிப் 05, 2026 07:02 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சிப்காட் வளாகத்தில் நடந்த அரசு விழாவில் 13,879 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிப்காட் வளாகத்தில், நேற்று காலை அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வரவேற்றார்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன்,முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், எம்.பி.,க்கள் ரவிக்குமார், தரணிவேந்தன், கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், ஆணையர் கிரண் குராலா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவையொட்டி, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 967 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவி தொகையை வழங்கினார்.
தமிழக அரசு ஏற்கனவே 33 லட்சத்து 60 ஆயிரத்து 192 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம், 35 லட்சத்து 43 ஆயிரத்து 159 பயனாளிகளுக்கு ஓய்வூதிய பலன்களை பெறுவார் என்று முதல்வர் தெரிவித்தார்.
விழாவில், இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் ' என் கனவு என் எதிர்காலம்' என்ற புதிய இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.688.48 கோடி செலவிலான 199 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, திண்டிவனம் புதிய பஸ் நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட, 24 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,879 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழாவில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 219 பயனாளிகளுக்கு பவர் டில்லர், நடவு இயந்திரம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இதேபோல் சமூக நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 2 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் என பல்வேறு துறை சார்பில் ரூ.43 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். விழுப்புரம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

