/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி முதல்வர் வருகை அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

ADDED : ஜன 20, 2025 06:42 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில் நடக்கும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக, விழுப்புரம் ஜானகிபுரம் அருகே அமைக்கப்பட்டு வரும் விழா மேடை பணியை அமைச்சர் பொன்முடி, நேற்று மாலை கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் அன்று திண்டிவனத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மறுநாள் 28 ம் தேதி நடக்கும் அரசு விழாவில் விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதுப்பித்து கட்டியுள்ள எல்லீஸ் அணைக்கட்டு, ஜானகிபுரம் பைபாசில் கட்டியுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதி போராளிகள் மணி மண்டபத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.
அப்போது எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.